×

உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: பதஞ்சலி நிறுவத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஹீமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் தவறான தகவல்களை கொண்ட உங்களது பொருட்களை ஏற்கனவே நாங்கள் தடை செய்திருக்கிறோம். இருப்பினும் அந்த பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் இன்னமும் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதனை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பதஞ்சலி நிறுவன தரப்பு வழக்கறிஞர், சமூக வலைதளங்களில் வெளியாகிய இருக்கக்கூடிய விளம்பரங்கள் தங்கள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறி பரவி கொண்டிருக்கிறது. அடுத்த விசாரணையின் போது அவை அனைத்தையும் தடுப்பது குறித்த முழு திட்டத்தையும் தெரிவிப்போம் என்றார்.

இதையடுத்து உத்தரவில், தடை செய்யப்பட்ட உங்களது பொருட்கள் மீதான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எனவே அத்தகைய பொருட்கள் எந்த வகையிலும் விற்பனை செய்யக் கூடாது. அதேபோன்று ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான எந்த ஒரு விளம்பரங்களும் ஒளிபரப்பக் கூடாது. இந்த விவகாரத்தில் துறை சார்ந்த அமைச்சகங்கள் ஒவ்வொரு நுகர்வோரும், ஒரு குறிப்பிட்ட பொருட்கள் தொடர்பாக புகார் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் ஏமாற்றும் வகையில் அல்லது விதிமுறைகளுக்கு மாறாக தயாரிக்கப்படும் விளம்பரங்களில் நடிக்கும் போது அல்லது பங்கெடுக்கும் போது அதை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எவ்வளவு விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்குமோ, அதே சம அளவு அவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

விளம்பரங்கள் தவறானதாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Patanjali ,Supreme Court ,New Delhi ,Hema Kohli ,Asanuddin Amanullah ,Dinakaran ,
× RELATED பதஞ்சலி நிறுவன நீதிமன்ற அவமதிப்பு; வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு